பன்றிப் பண்ணை (கொட்டகை)அமைத்தல்
பெண், ஆண் பன்றிகளுக்கான கொட்டகை
திறந்தவெளி அமைப்புடன் கூடிய, ஒரு புறம் மட்டும் கூரையால் வேயப்பட்ட அறைக்குள் 10 - 115 பெண் பன்றிகள் வளர்க்கலாம். ஒரு பன்றிக்கு 2 மீட்டர் அளவு இடவசதி இருக்குமாறு பார்த்துக் கொள்வதால் அவசியம். சினைத் தருணத்தில் கிடாப் பன்றியை இதனுள் விட்டு விடலாம்.
(புகைப்பட ஆதாரம்: KVK வேளாண் அறிவியல் நிலையம், நாமக்கல்.)
குட்டி ஈனும் பன்றிகளுக்கு உரிய கொட்டகை அமைப்பு
குட்டி ஈனும் தருணத்தில் சினைப் பன்றிகள் 2.5 x 4 = 10.0 மீட்டர் குட்டிகளுக்குமான இடவசதியுடன், தீவனம் நல்ல தண்ணீர் வசதியுடன் சுகாதாரமாக தனிக்கொட்டில் இருக்கவேண்டும்.
பன்றிகளுக்குத் தேவையான இடவசதிகள்
பன்றி வகை
|
தேவையான இடவசதி மீட்டர் / ஒரு பன்றிக்கு |
ஒரு கொட்டிலில் அடைக்கக்கூடிய அதிகபட்ச பன்றிகளின் எண்ணிக்கை |
சுற்றுச்சுவருடைய அமைப்பு |
திறந்தவெளி
அமைப்பு |
|
ஆண் பன்றி கொட்டில் |
6-7 |
8.8-12.0 |
ஒரு பன்றிக்கு மட்டும் (தனித்தனியாக) |
குட்டி ஈனும் கொட்டில் |
7.0-9.0 |
8.8-12.0 |
ஒரு பெண் பன்றிக்கு மட்டும் |
3-5 மாதங்கள் வயதுடைய பன்றிக்குட்டிகள் |
0.9-1.2 |
0.9-1.2 |
30 |
5 மாதவயதிற்கு மேல் |
1.3-1.8 |
1.3-1.8 |
30 |
குட்டி ஈனாத / சினையாகாத பெண் பன்றிகள் |
1.8-2.7 |
1.4-1.8 |
3-10 |
(ஆதாரம்: வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டுக்கான தேசிய வங்கி)
|